கரூர், பிப்.13: தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 8 வட்டாரங்களில் 40 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகறிது. இந்த முகாம்களில், 15 துறைகள் சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 13ம்தேதி அன்று அரவக்குறிச்சி வட்டாரத்தில் நாகம்பள்ளி கிராம ஊராட்சி மலைக்கோவிலூரில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் மண்டபத்திலும்,
வேலம்பாடி கிராம ஊராட்சியில் சவுந்திராபுரத்தில் உள்ள ஏஎஸ் மஹாலிலும், சேந்தமங்கலம் கிழக்கு கிராம ஊராட்சி கே.புதுப்பட்டியில் உள்ள குரும்பபட்டி விபிஎஸ்பி கட்டிடத்திலும், கொடையூர் கிராம ஊராட்சி சீத்தப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள கட்டிடத்திலும், இனங்கனூர் கிராம ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கரூர் மாவட்டத்தில் 40 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.
