×

குலசை கோயிலில் அம்மன் தேர் உலா

உடன்குடி, பிப். 13: குலசை கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மன் தேர் உலா நடந்தது. தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 2 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவில் முத்தாரம்மன் தேரில் உலா நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

The post குலசை கோயிலில் அம்மன் தேர் உலா appeared first on Dinakaran.

Tags : Amman Tar Walk ,Kulasai Temple ,Udonkudi ,Amman Ter Uala ,Kulasekaranpatnam Mutharamman Temple ,Dasara festival ,Amman Ter Ula ,
× RELATED ஓய்வூதியர் தின விழா