×

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காங்கிரசில் இணைந்த அபிஜித் முகர்ஜி


கொல்கத்தா: மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி. காங்கிரஸ் முன்னாள் எம்.பியான இவர் 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர் எதிர்பாரா வகையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அபிஜித் முகர்ஜி நேற்று மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பினார். மேற்குவங்க காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.

The post 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காங்கிரசில் இணைந்த அபிஜித் முகர்ஜி appeared first on Dinakaran.

Tags : Abhijit Mukherjee ,Congress ,Kolkata ,President ,Pranab Mukherjee ,2019 ,Trinamool Congress ,Dinakaran ,
× RELATED உலக அளவில் ஊக்கமருந்து பரிசோதனையில்...