×

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அமெரிக்கர் உள்பட 7 பேர் கைது

புதுடெல்லி: பயங்கரவாத சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஒரு அமெரிக்கர் மற்றும் 6 உக்ரைனிய நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அமெரிக்கர் மேத்யூ வான்டைக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உக்ரேனிய நாட்டவர்கள் ஹுர்பா பெட்ரோ, சில்வியாக் தாராஸ், இவான் சுக்மனோவ்ஸ்கி, ஸ்டெபான்கிவ் மரியன், ஹொன்சாருக் மாக்சிம் மற்றும் கமின்ஸ்கி விக்டர் ஆவர். டெல்லியில் உள்ள ஒரு சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் அவர்களை 11 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைந்து, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சில குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

Tags : New Delhi ,India ,Matthew VanDyke ,Hurba Petro ,Sylviak Taras ,Ivan Sukhmanovsky ,Stepankiv… ,
× RELATED விடுப்பு மறுக்கப்பட்டதால் வங்கி...