- கோயம்புத்தூர்
- புஷ்பதேவி
- வடவள்ளி
- ரங்கப்பகவுண்டர்புதூர்
- அன்னூர் தாலுக்கா
- கோயம்புத்தூர் மாவட்டம்
- கலெக்டர்
- கிராந்திகுமார் பாடி
- தின மலர்
கோவை, பிப். 12: கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் வடவள்ளி ரங்கப்பகவுண்டர்புதூரை சேர்ந்தவர் புஸ்பாதேவி (46). விவசாயான இவர், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நானும், எனது குடும்பத்தாரும் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு, மேட்டுப்பாளையம் தாலுகா, பெள்ளேபாளையம் கிராமத்தில் 3.68 ஏக்கர் விவசாய பூமி உள்ளது. இதில், 1.84 ஏக்கர் நிலம், எனக்கு சொந்தமானது. மீதமுள்ள 1.84 ஏக்கர் நிலம் எனது குடும்ப உறவினருக்கு பாத்தியப்பட்டது.
மேற்படி சொத்து, வருவாய் துறை ஆவணங்களின்படி, எங்களுடைய முழுமையான அனுபவ சுவாதீனத்தில் உள்ளது. ஆனால், எங்களுக்கு சம்பந்தம் இல்லாத அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர், போலி ஆவணங்களை உருவாக்கி, எங்களது சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். எங்கள் மீது போலீசில் பொய் புகார் கொடுத்து, கொலை மிரட்டல் விடுக்கிறார். அத்துமீறி சொத்தை அபகரிக்க முயற்சி செய்யும் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். மேலும், நாங்கள் நிம்மதியாக விவசாய பணியில் ஈடுபட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
The post போலி ஆவணம் தயாரித்து 3.68 ஏக்கர் நிலம் அபகரிக்க முயற்சி appeared first on Dinakaran.
