×

பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், சொக்கநாதபுரம் கிராமம், கொம்புக்காரன் குட்டையைச் சேர்ந்த கண்ணன்-பரிமளா தம்பதியின் மகள் கவிபாலா (12), அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பில் பயின்றுவந்த நிலையில் கடந்த 10ம் தேதி பள்ளியில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மாணவி கவிபாலாவின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,M.U. K. ,Stalin ,Kavibala ,Kannan-Parimala ,Kombukaran village ,Patukkottai Vatom ,Sokkanathapuram village ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...