×

கவுகாத்தி ஐகோர்ட் உத்தரவு ரத்து; ஒவ்வொரு ஏடிஎம் மையத்திற்கும் ஒரு காவலாளி சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி


புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து ஏடிஎம்களுக்கும் ஒரு காவலாளி நியமிக்க வேண்டும் என்று கவுகாத்தி உயர்நீதிமன்றம் 2013ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வங்கிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரித்தனர். அப்போது, நீதிபதிகள்,” ஒவ்வொரு ஏடிஎம் மையங்களுக்கும் ஒரு தனி காவலாளியை நியமிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இந்த விவகாரத்தில் வங்கிகளின் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. எனவே கவுகாத்தி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

The post கவுகாத்தி ஐகோர்ட் உத்தரவு ரத்து; ஒவ்வொரு ஏடிஎம் மையத்திற்கும் ஒரு காவலாளி சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Gauhati High Court ,Supreme Court ,New Delhi ,Assam ,P.R. Kawai ,K. Vinod… ,Dinakaran ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...