பெங்களூரு: நாட்டின் ஒடிசா மாநில சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜ ஆதரவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் திலீப் ரெய், வெற்றிபெற சில வாக்குகள் குறைவாக உள்ளது. ஒடிசா பேரவையில்1 4 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் வரலாற்றில் முதல் முறையாக பிஜு ஜனதா தள கட்சியின் வேட்பாளரை மாநிலங்களவை தேர்தலில் ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரை ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் பாஜவுக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியது.
இதனால், முதல் கட்டமாக பிரபுல் சந்திர பிரதான், சத்யஜித் கோமக, டாக்டர் சி.எஸ்.ரசூன்பக்க, பவித்ரா சாவந்த், நீலமாதஐகாக, அப்பலசுவாமி, மங்கு ஷில்லி உள்பட 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள், நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநில தலைநகர், புவனேஷ்வரில் இருந்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் பக்தசரண்தாஸ் தலைமையில் பெங்களூரு வந்தனர். அவர்களை வரவேற்ற மாநில காங்கிரஸ் தலைவரும் துணைமுதல்வருமான டி.கே.சிவகுமார், ராம்நகரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளார். இன்று மேலும் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு வருவார்கள் என்று தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் திங்கட்கிழமை வரை ரிசார்ட்டில் தங்க உள்ளனர்.
