×

காணாமல் போன சிறுவன் குட்டையில் சடலமாக மீட்பு: சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரைச் சேர்ந்த மகேந்திரன்-கவிதா தம்பதியின் மகன் லோகேஷ்குமார் (8) பம்மதுகுளம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சனிக்கிழமை மாலை விளையாட சென்ற லோகேஷ்குமார் வீடு திரும்பாததால் சோழவரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் சிருவனை தேடிய நிலையில், நேற்று சிறுவனை கண்டுபிடித்து தர வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே உள்ள அரிசி ஆலை குட்டையில் நேற்று தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன சிறுவனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து சிறுவன் சடலம் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே சிறுவன் எப்படி குட்டையில் விழுந்தான், அரிசி ஆலையில் பாதுகாப்பு இல்லையா எனவும், சிறுவனின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனக்கூறி உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post காணாமல் போன சிறுவன் குட்டையில் சடலமாக மீட்பு: சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Lokeshkumar ,Mahendran-Kavitha ,Sivanthi Adithan Nagar ,Nallur ,Sengunram ,Bammadukulam Union Primary School ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் நள்ளிரவில் காசி...