சென்னை: வனவிலங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்ய சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதிலளித்துள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உயிரிழந்த யானை உடலை உடற்கூறாய்வு செய்யவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஜன.23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
