×

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை: செங்கல்பட்டு கலெக்டர் அறிவிப்பு

செங்கல்பட்டு: தமிழகத்தில் ஆண்டுதோறும் வள்ளலார் தினத்தில் ராமலிங்க அடிகளாரை வழிபடுவதும், அன்றைய தினம் தைப்பூச திருவிழா என்பதால் முருகபெருமானுக்கு மாலை அணிவித்து விரதமிருந்து வழிபாடு செய்வதும் வழக்கம். அந்நாளில், தமிழகம் முழுவதிலும் மது விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்து, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை (11ம் தேதி) தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து டாஸ்மாக் கடைகளும் மதுபான பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் சட்டவிரோதமாக மதுபானம் விற்றாலோ, மதுபான பார்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோத கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்டவிதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

The post டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை: செங்கல்பட்டு கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TASMAC ,Chengalpattu Collector ,Chengalpattu ,Tamil Nadu ,Ramalinga Adigal ,Vallalar Day ,Thaipusam festival ,Lord ,Muruga ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...