நியூயார்க்: கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் நாசாவ் கவுண்டியில் கட்டுமான நிர்வாகியாகிய அமன்தீப் சிங்(36) என்பவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். மேலும் அவர் கோகைனும் உட்கொண்டிருந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற 14வயது சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விபத்தினால் அச்சமடைந்த சிங் அங்கிருந்த குப்பைத்தொட்டியின் பின் ஒளிந்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பின்னர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
The post போதையில் கார் ஓட்டி 2 சிறுவர்கள் பலி இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 25 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
