×

காலம் மாறிப்போச்சு…கூகுள் பே, கியூஆர் கோடுடன் பிச்சை எடுத்த 2 பெண்கள்: கோட்டயம் ரயில் நிலையத்தில் சிக்கினர்

திருவனந்தபுரம்: கோட்டயம் ரயில் நிலையத்தில் கூகுள் பே, கியூஆர் கோடுடன் பிச்சை எடுத்த 2 இளம்பெண்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பிடித்தனர். தற்போது டிஜிட்டல் பணப்புழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் பிச்சைக்காரர்கள் தங்களது வழக்கமான ஸ்டைலை மாற்றி ஹைடெக் ஆகிவிட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் ரயில் நிலையத்தில் 2 இளம்பெண்கள் கையில் செல்போன் மற்றும் கியூஆர் கோடு அட்டையை காண்பித்து பிச்சை எடுப்பதை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கவனித்தனர்.

அவர்கள் இருவரும் பயணிகளிடம் போனை காண்பித்து கூகுள் பே மூலம் பிச்சை தருமாறு கேட்டுள்ளனர். உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் ஒருவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி என்றும், இன்னொருவர் கர்நாடகாவைச் சேர்ந்த சரஸ்வதி என்றும் தெரியவந்தது.

இருவருக்கும் பின்னணியில் ஒரு ஸ்பான்சர் இருப்பதும், கூகுள் பே மூலம் கிடைக்கும் பணம் அந்த ஸ்பான்சரின் வங்கி கணக்குக்கு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லாததால் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இருவரையும் பிடித்து ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றினர். அவர்களிடம் இருந்த ஏராளமான கியூஆர் கோடு அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post காலம் மாறிப்போச்சு…கூகுள் பே, கியூஆர் கோடுடன் பிச்சை எடுத்த 2 பெண்கள்: கோட்டயம் ரயில் நிலையத்தில் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Kottayam railway station ,Thiruvananthapuram ,Railway Protection Force ,Times ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்