×

வத்தலக்குண்டுவில் இடியும் நிலையில் உள்ள பழைய காவல் நிலைய கட்டிடம்

*அசம்பாவிதம் முன் அகற்றப்படுமா?

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டுவில் இடியும் நிலையில் உள்ள பழைய காவல் நிலைய கட்டிடத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வத்தலக்குண்டுவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா பஸ் நிலையம் முன்பு காவல் நிலையம் அருகே பழைய காவல் நிலைய கட்டிடம் உள்ளது.

தற்போது இக்கட்டிடம் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதிய காவல் நிலைய கட்டிடத்திற்கு வருகிறவர்கள் சில நேரங்களில் பழைய காவல் நிலைய கட்டிடம் அருகில் கூட்டமாக நின்று பேசி வருகின்றனர்.

இதனால் பழைய காவல் நிலைய கட்டிடம் இடிந்து ஆட்கள் மீது விழும் அபாய நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கும் முன்பு உடனடியாக பழைய காவல் நிலைய கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வத்தலக்குண்டுவில் இடியும் நிலையில் உள்ள பழைய காவல் நிலைய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : POLICE STATION ,WATTALAKUNDU ,THUNDERSTORMS ,Watalakundu ,Martyr ,Subramaniya ,Shiva Bus Station ,Old Police Station Building ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...