×

₹1 கோடி பணம், நகைகள் பறிமுதல் கெயில் இயக்குனர் கைது : சிபிஐ நடவடிக்கை

புதுடெல்லி : ‘கெயில்’ எனப்படும்  இந்திய எரிவாயு ஆணையத்தில் மார்க்கெட்டிங் இயக்குனராக இருந்தவர் ரங்கநாதன். இந்த நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் பெட்ரோ கெமிக்கல் பொருள்களை   தள்ளுபடி விலையில் விற்பதில் உயர் அதிகாரி ஒருவர் டீலர்களிடம்  லஞ்சம் வாங்குவதாக சிபிஐ.க்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து பவன் கவுர், ராஜேஷ் குமார், ராமகிருஷ்ணன் நாயர், சவுரவ் குப்தா மற்றும் ஆதித்யா பன்சால் ஆகிய 5 பேரை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராஜேஷ் குமார் தொழிலதிபர் ஆவார். இவர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.  இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் கெயில் மார்க்கெட்டிங் இயக்குனர் ரங்கநாதனுக்கு தொடர்பு இருப்பதும், அவர் ₹50 லட்சம் லஞ்சம் வாங்கியதும்  தெரியவந்தது.ரங்கநாதனின் அலுவலகம், வீடு மற்றும் நொய்டா, குர்கான், பஞ்சுக்லா, கர்னால்  நகரங்களில் உள்ள 8 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இதில், ரங்கநாதன் வீட்டில் இருந்து ₹1 கோடியே 29 லட்சம் பணம், ஏராளமான நகைகள், விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்….

The post ₹1 கோடி பணம், நகைகள் பறிமுதல் கெயில் இயக்குனர் கைது : சிபிஐ நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Gail ,New Delhi ,Ranganathan ,Gas Commission of India ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...