×

ஆட்சிமொழி சட்டப்படி அலுவலக கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்

பெரம்பலூர், பிப்.7: அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆட்சி மொழிச் சட்டத்தின்படி முறையாக பராமரிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2 நாட்கள் (6,7நாட்கள்) நடைபெறும் தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கினை நேற்று பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு நேற்று தொடங்கி வைத்த்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு பேசியதாவது: தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் கடந்த 1956 டிசம்பர் 27ம் தேதி இயற்றப்பட்டு நடை முறைபடுத்தப்பட்டது. அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்கம் முழுமையாக நடைபெற துணைபுரியும் வகையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் கையொப்பமிட வேண்டும் மற்றும் அலுவலகத்திலுள்ள கோப்புகள் தமிழில் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் எனவும், வரைவுகள், குறிப்புகள் தமிழில் பிழையின்றி எவ்வாறு எழுதுவது என்பது தொடர்பாகவும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இந்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

அனைத்துத் துறைகளின் சார்பிலும் கண்காணிப் பாளர் நிலையிலான அலுவலர்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளீர்கள். இந்தப் பயிற்சிவகுப்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, உங்கள் அலு வலகங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆட்சி மொழிச் சட்டத்தின்படி முறையாக பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித் தார். தொடர்ந்து, இந்தப் பயிலரங்கில் தமிழ்ச் செம்மல் விருதாளர் பாரதி ஆறுமுகம் கலந்து கொண்டு, அலுவலகக் குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் என்ற தலைப்பிலும், இலாடபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் மாயக்கிருட்டிணன் கலந்து கொண்டு ஆட்சிமொழி வரலாறு, சட்டம் என்ற தலைப்பிலும், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ் கலந்து கொண்டு ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்பிலும்,

புதுக்கோட்டை மாமல்லன் போட்டித் தேர்வுகள் பயிற்சி நடுவத்தின் நிறுவுனர் செந்தில்முருகன் கலந்து கொண்டு, மொழி பெயர்ப்பும் கலைச் சொல்லாக்கமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பயிலங்கில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பல் வேறு அரசுத்துறையைச் சார்ந்த 80க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்ட னர்

The post ஆட்சிமொழி சட்டப்படி அலுவலக கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Official Language Workshop ,Tamil Development Department ,Perambalur District Collectorate Office Conference Hall ,Dinakaran ,
× RELATED தேர்வு மையத்தில் ஐஜி, எஸ்பி ஆய்வு; கடும் பனிப்பொழிவு குளிரால் மக்கள் அவதி