×

துணை முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

சாயல்குடி, பிப்.5: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழத்தூவலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டது. 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

ஒரு சில வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி செய்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்கள், பரிசு தொகை வழங்கப்பட்டது. முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, பரமக்குடி பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் வந்து பார்த்து ரசித்தனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post துணை முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.

Tags : Cow slaughter ,Deputy Chief Minister ,Sayalgudi ,Keezhathuval ,Udhayanidhi Stalin ,Keezhathuval village ,Ramanathapuram district ,Theni ,Dindigul ,Madurai ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா