×

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

 

கோபி, பிப்.5: கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட தாசப்ப கவுண்டன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சத்தியமங்கலம் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சத்தி தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜ் தலைமையில், டி.என்.பாளையம் வட்டார மருத்துவ அலுவலரும், தாசப்பகவுண்டன் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருமான டாக்டர். மதன்குமார் முன்னிலையில் தீ தடுப்பு ஓத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர் சோமசுந்தரம், தீயணைப்பு வீரர்கள் ஸ்ரீதர், மகேந்திரன், தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டு எண்ணெயில் ஏற்படும் தீ விபத்து, காஸ் சிலிண்டரில் ஏற்படும் தீ விபத்துகளை பாதுகாப்பாக அணைக்கும் முறை குறித்து நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து காஸ் சிலிண்டரில் காஸ் ஏஜென்சி மூலம் விற்பனை செய்யப்படும் தரமான டியூப்புகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தாசப்பகவுண்டன் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் நாராயணன், மருந்தாளுநர், குமார், பகுதி சுகாதார செவிலியர் இந்திராகாந்தி, டி.ஜி.புதூர் ஆரம்ப சுகாதார நிலைய செஙிலியர்கள், மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Government ,Primary Health Station ,Gobi ,Satyamangalam Fire Department ,Government Primary Health Centre ,Tasappa County ,Greater Kodiveri Municipality ,Chati ,Fire ,Station ,Officer ,Dinakaran ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது