×

சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுபதிவு தொடக்கம்

புதுடெல்லி: 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. மூன்றாம் முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ள ஆம்ஆத்மி, பா.ஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. 1.56 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13,766 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும். இதற்காக 220 கம்பெனி துணை ராணுவப் படை, 35,626 டெல்லி போலீசார், 19,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படும்.

The post சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுபதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Delhi Assembly elections ,New Delhi ,Delhi Assembly ,Aam Aadmi Party ,BJP ,Congress ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது