×

தமிழகத்தில் நேர்காணல் மூலம் மருத்துவர் நியமனம்: டிடிவி தினகரன் எதிர்ப்பு

சென்னை: தமிழகத்தில் நேர்காணல் மூலம் அவசரகதியில் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முடிவா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் முடிவை கைவிடவேண்டும். நேர்காணல் மூலம் 658 மருத்துவர்கள் நியமனம் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேர்காணல் முறையில் அவசரகதியில் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் நேர்காணல் மூலம் மருத்துவர் நியமனம்: டிடிவி தினகரன் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DTV Dinakaran ,Chennai ,AMUKA ,Medical Personnel Selection Board ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...