×

முத்துப்பேட்டையில் வனத்துறை சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழிப்புணர்வு ஓவிய போட்டி

 

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வனத்துறை சார்பில் உலக ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம், ஓவியப்போட்டி, விழிப்புணர்வு ஆகியவை நடைபெற்றது. உலக ஈர நிலங்கள் தினம் 2025 உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவதின் ஒரு பகுதியாக மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பெயரில் முத்துப்பேட்டை வனத்துறை சார்பில் உலக நிலங்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் மாணவ மாணவிகளுக்கு காடுகள் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் மத்தியில் அலையாத்திகாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கம் மாறும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டது. நிறைவாக வனச்சரக அலுவலர் சரவணகுமார் ஈரநிலங்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் வனவர் சீனிவாசன், ஓஎம்ஏ பள்ளி தாளாளர் சாமிநாதன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் வனத்துறை சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழிப்புணர்வு ஓவிய போட்டி appeared first on Dinakaran.

Tags : World Wetlands Day Awareness Painting Competition ,Forest Department ,Muthupettai ,Muthupettai, Thiruvarur district ,World Wetlands Day ,World Wetlands Day 2025 ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா