×

தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதிகோரி வழக்கு 6 வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவு

சென்னை: சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சரத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கட்சிக் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்தும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். எனவே, கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்குமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத், 2 வாரங்களில் மாநகராட்சியிடம் மனுதாரர் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தின் மீது 6 வாரங்களில் சென்னை மாநகராட்சி முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதிகோரி வழக்கு 6 வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Victory Party ,Chennai ,District Secretary ,Sarathkumar ,Madras High Court ,Thiruveethi Amman Temple Street ,Aminkarai, Chennai.… ,Dinakaran ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்