காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: சீமான் பேசுவது தொடர்பாக முதலில் கோபத்தில் பேசுவதாகவும், மற்றவர்களை மதிக்காமல் பேசுவதாகவும் நினைத்தேன். ஆனால் சீமானின் அடிப்படையே தவறாக உள்ளது. விடுதலைப்புலிகளை தனது சுயநலத்துத்துக்காக, சுயலாபத்துக்காக சீமான் பயன்படுத்தியுள்ளார். பேச்சாளராகத்தான் அவரை விடுதலை புலிகள் அழைத்துள்ளனர். ஆனால் அதனை தனது சுயலாபத்துக்காக பயன்படுத்தியுள்ளார். விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை அழைத்து ஆயுத பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? சீமான் கொள்கை வீரராக, புரட்சியாளராக தன்னை காண்பித்துக் கொண்டது எல்லாம் போலித்தனம். மோசடித்தனம் வெளிப்பட்டு விட்டது. அனைவரும் தலைவராக ஏற்றுக்கொண்ட சமூகநீதி போராளி ெபரியார் குறித்தும் பேசி வருகிறார். இவரை நம்பி ஏமாந்தவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post சீமான் போலி புரட்சியாளர்: டிடிவி.தினகரன் காட்டம் appeared first on Dinakaran.
