மதுரை, பிப். 1: மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏற்கனவே ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் தடகளத்திற்காக சிந்தடிக் ஓடுதளம் மற்றும் அதன் மையப்பகுதியில் நவீன கால்பந்து மைதானம் ஆகியவை அமைக்கப்படுகிறது. இவைதவிர ரூ.6 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமிக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மினி ஸ்டேடியம் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் மைதானத்தில் உள்ள விளையாட்டு விடுதி அருகே மினி ஸ்டேடியம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. இதனை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளர் முருகன், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியாளர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியில் மினி ஸ்டேடியம் appeared first on Dinakaran.
