×

சீர்காழி அருகே இலவச கால்நடை மருத்துவ முகாம்

 

சீர்காழி,பிப்.1: சீர்காழி அருகே இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்பாவை கிராமத்தில் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் ராம்நாத், மயிலாடுதுறை மாவட்ட துணை இயக்குனர் அன்பரசன் ஆகியோரின் உத்தரவின் பேரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவெண்காடு கால்நடை மருத்துவமனை அலுவலர் முனைவர் பிரவீன் தலைமை தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கார்த்திகேயன், கவின், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மலடு நீக்க சிகிச்சை, சினை ஊசி போடுதல், குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றனர்.

The post சீர்காழி அருகே இலவச கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Zonal Animal Husbandry Department ,Ramnath ,Mayiladuthurai District ,Deputy Director ,Anbarasan ,Embavai village ,Mangaimadam ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டம்