×

தாய்லாந்து பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் உலக ஜூனியர் நம்பர் ஒன் வீரரான தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி இருந்தனர். இருவரும் நேற்று காலிறுதியில் போட்டியில் களமிறங்கினர்.

சீனாவை சேர்ந்த ஜெங் ஜிங் வாங்குடன் மோதிய ஸ்ரீகாந்த் 17-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இதேபோல், மற்றொரு சீன வீரரான சுவான் சென் ஜு பியுடன் மோதிய சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன், 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை 18-21 என்ற இழந்ததால், வெற்றியை தீர்மானிக்க 3வது செட் போட்டி நடந்தது. இதில் சீனா வீரர் 21-13 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி ஒரு மணி நேரம் 10 நிமிடம் நடந்தது.

The post தாய்லாந்து பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thailand ,quarterfinals ,Bangkok ,Thailand Masters ,India ,Srikanth ,Shankar Muthusamy Subramanian ,Tamil Nadu ,Thailand badminton quarterfinals ,Dinakaran ,
× RELATED சீரி ஏ கால்பந்து பைசாவை வீழ்த்தி ஜுவன்டஸ் அபாரம்