×

இங்கிலாந்துடன் டி20 தொடரை வென்றது: இந்தியா அசத்தல் வெற்றி

புனே: இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4வது போட்டி புனே எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், அபிஷேக் சர்மா 29 ரன், ரிங்கு சிங் 30 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, சிவம் துபே ஜோடி அதிரடியாக ரன்களை குவித்து அரை சதத்தை கடந்தனர். ஹர்திக் பாண்டியா 53 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), சிவம் துபே 53 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. இங்கிலாந்து பந்து வீச்சில் சாகிப் மஹ்மூத் 3, ஆதில் ரஷ்த் மற்றும் ஆர்ச்சர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

182 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 166 எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக புரூக் 59 ரன், பென் டக்கட் 39 ரன் எடுத்தனர். இந்திய பந்து வீச்சில் ரவி பிஷ்னாய் 3, ஹர்ஷித் ரானா, வரும் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்று 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

The post இங்கிலாந்துடன் டி20 தொடரை வென்றது: இந்தியா அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,T20 ,England ,Pune ,Pune MCA Cricket Stadium ,Sanju Samson ,Indian ,Thilak… ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...