- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- சிவகங்கை
- தமிழ்நாடு சாலைகள் துறை
- உதவி மாவட்ட பொறியாளர்
- சையத் இப்ராஹிம்
- ராமச்சந்திரனார் பூங்கா
- டிஎஸ்பி
- அமலா அட்வின்
- தின மலர்
சிவகங்கை, பிப். 1: சிவகங்கையில் தமிழ்நாடு நெஞ்சாலைத்துறை சார்பில் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிவகங்கை இராமச்சந்திரனார் பூங்கா அருகே விழிப்புணர்வு பேரணிக்கு உதவிக்கோட்டப் பொறியாளர் சையது இப்ராஹிம் தலைமை வகித்தார். டிஎஸ்பி அமலஅட்வின் பேரணியை தொடக்கி வைத்தார். பின்னர் காந்திவீதி, மரக்கடை வீதி, தெப்பக்குளம் வழியாக சிவகங்கை அரண்மனை வாசலில் நிறைவடைந்தது. நூற்றுக்கணக்கான நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் மற்றும் ஹெல்மெட் வழங்கினர். இதில், நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்தி இசக்கி, எஸ்ஐ அழகுராணி, சாலை ஆய்வாளர் முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.
