×

வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்: பிப்.11ம் தேதி தெப்ப உற்சவம்


மதுரை: மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா, மீனாட்சியம்மன் கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வரும் பிப்.11ம் தேதி நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியக்கன் கோயிலின் உபகோயிலான வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில், ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று தெப்பத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். அன்றைய நாளில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் தெப்பக்குளத்தில் இருக்கும் தெப்பத்தில் எழுந்தருளி காலை 2 முறையும், மாலை ஒரு முறையும் தெப்பத்தைச் சுற்றி வருவர்.

இதன்படி இந்தாண்டு தெப்பத் திருவிழா இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் காலை 10.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி இன்று முதல் தினசரி காலை, மாலை வேளைகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளில் உலா வருவர். விழாவின் மிக முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் பிப்.11ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59க்குள் நடக்கிறது. அன்று அதிகாலை மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி, மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

பின் தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து இழுக்க காலையில் இரண்டு முறை, மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்தி தீபாராதனை நடைபெறும். தெப்ப உற்சவம் நடைபெற்று, இரவு கோயிலுக்கு வந்து சேரும் வரை மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பிப்.5ல் சைவ சமய ஸ்தாபித லீலை
தெப்பத் திருவிழாவில் பிப்.5ம் தேதி திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 7ம் தேதி மச்சக்கந்தியார் திருமணக்காட்சி, 8ம் தேதி எடுப்பு தேர், 9ம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல், 10ம் தேதி கதிரறுப்பு, 11ம் தேதி காலையில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

The post வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்: பிப்.11ம் தேதி தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Vandiyur Mariyamman Temple Tephad Festival Flagging ,Debpa ,Madurai ,Madurai Vandiyur Mariyamman Temple Tepat Festival ,Meenakiyamman Temple ,Deppa Enthusiam ,Vandiyur Mariamman Temple ,Madurai Meenadsyakan Temple ,Vandiyur Maryamman Temple Depad Festival ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்