×

அழகர் கோயில் சாலை விரிவாக்க திட்டம் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் துவக்கம்

 

மதுரை: அழகர் கோயில் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கின. மதுரை பெரியார் பஸ் நிலையம் துவங்கி அழகர் கோயில் வரையிலான, 21 கி.மீ தூர சாலையை வாகன போக்குவரத்து அதிகரித்ததன் காரணமாக, நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. ஏற்கனவே, பெரியார் பஸ் நிலையம் துவங்கி அப்பன்திருப்பதி வரை விரிவாக்க பணிகள் நடந்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் அடுத்தகட்டமாக, கள்ளந்திரி பாலத்திற்கு முன்பிருந்து அழகர் கோயில் கோட்டை வாசல் வரை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள ரூ.22 கோடியில் கடந்த, 27ம் தேதி பூமிபூஜை போடப்பட்டது. இதன்படி, முதற்கட்டமாக அழகர்கோயில் சாலையில் பொய்கைகரைபட்டியிலிருந்து நத்தம் செல்லும் சாலை பிரிவிற்கு அருகே துவங்கி 275 மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கி உள்ளன. இதில் முதற்கட்டமாக தூண்கள் எழுப்ப தேவையான எண்ணிக்கையில் குழிகள் தோண்டும் பணிகள் நடக்கின்றன. அடுத்தகட்டமாக திட்டத்திற்காக அகற்றப்பட உள்ள மரங்களை ஏலம் விடும் பணிகள் நடைபெற உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

The post அழகர் கோயில் சாலை விரிவாக்க திட்டம் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Alagar ,Madurai ,Alagar Temple ,Highways Department ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்