×

பாரத சாரணியர் வைர விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உற்சாக நடனம்

திருச்சி, ஜன.31: திருச்சி மணப்பாறையில் நடந்து வரும் பாரத சாரண சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நுாற்றாண்டு பெருந்திரளணி நிகழ்ச்சியில் நாள்தோறும் நடந்து வரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சாரண, சாரணியருடன் இணைந்து உற்சாக நடனமாடி மகிழ்ந்தார். பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பெருந்திரளணி நிகழ்ச்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோலாகலமாக நடந்து வரும் இந்த பெருந்திரளணியின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத் தலைவரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் தவறாமல் பங்கெடுத்து வருகிறார்.

அவ்வகையில் நேற்று முன்தினம் மாலை நடந்த கலை நிகழ்ச்சிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். சாரண, சாரணியர் ஆர்வமுடன் நிகழ்த்திய நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நேரில் கண்டுகளித்து சாரண, சாணியரை வாழ்த்தினார். மேலும், பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பாராட்டினார். இறுதியில் சாரண சாரணியருடன் தானும் இணைந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.

The post பாரத சாரணியர் வைர விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உற்சாக நடனம் appeared first on Dinakaran.

Tags : School Education ,Bharata Saraniyar Diamond Festival ,Trichy ,School Education Minister ,Anbil Mahesh ,Muthamizharigna Kalaignar Centenary Festival ,Manapparai ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது