×

செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற ப்ரித்வி சேகர்: துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை: செவித்திறன் குறைபாடு உடையோருக்கான ஆஸ்திரேலிய டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்ற ப்ரித்வி சேகர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாற்றுத்திறனாளி டென்னிஸ் வீரர் ப்ரித்வி சேகர் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் 24.1.2025 முதல் 26.1.2025 வரை நடைபெற்ற செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலியா டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று, சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்டத்தின் வீரர் ப்ரித்வி சேகர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து, ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதற்கான பரிசுக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின்போது ப்ரித்வி சேகரின் பெற்றோர், எங்களது சொந்த செலவில் குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்க முடிந்தது. தற்போது எலைட் திட்ட விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து ஐரோப்பிய அளவிலான 3 டென்னிஸ் போட்டிகளில் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பை பெற்றதால், ஆஸ்திரேலியா டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் செலவுகள் குறித்த அச்சமின்றி விளையாடி வெற்றி பெற்றார் ப்ரித்வி சேகர். பிள்ளைகளின் விளையாட்டு ஆர்வத்தை புரிந்து அவர்களை பல்வேறு போட்டிகளில் விளையாட வைக்கும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி என்றனர். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற ப்ரித்வி சேகர்: துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Prithvi Shekhar ,Australian Tennis Tournament for the Deaf ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,Australian Tennis Tournament for the ,Melbourne, Australia ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...