×

சாரண சாரணியர் வைரவிழாவில் இன்று…

திருச்சி, ஜன.30: திருச்சி, மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் இன்று ஜன.30ம் தேதி நடக்கும் நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு: காலை 6 மணிக்கு சாரண, சாரணியர் விழுத்து எழுதல், 6.30 மணி முதல் 7.30 மணி வரை உடற்பயிற்சி, காலை 7.30 மணிக்கு காலை உணவு, காலை 8.30 மணிக்கு கூடார ஆய்வு மற்றும் சாரணர் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி, 8.45 மணிக்கு சாரணியர்கள் கூட்டம், காலை 9 மணிக்கு இளைஞர்களுக்கான நிகழ்ச்சி, இதில் சாகச நிகழ்ச்சி, நகைச்சுவை மற்றும் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறும், இதைத்தொடர்ந்து கிராம சுற்றுச்சூழல் மேம்பாட்டு நிகழ்ச்சி, அடுத்து வாலிப தலைவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதியம் 1 மணிக்கு மதிய உணவு இடைவேளை, மதியம் 2.30 மணிக்கு மீண்டும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் துவங்குகிறது, மாலை 4.30 மணிக்கு வாலிப தலைவர்களுக்கான கூட்டம், மாலை 5 மணிக்கு இரவு நடைபயணம், மாலை 5.30 மணிக்கு உள்நாட்டு சாரண, சாரணியர் சந்திப்பு, மாலை 6.30 மணிக்கு ஜம்பூரி அலுவலர்கள் மற்றும் துணை கூடார தலைவர்கள் சந்திப்பு, இரவு 7.30 மணிக்கு இரவு உணவு, இரவு 8 மணிக்கு நாட்டுப்புற நடன நிகழ்ச்சி போட்டி, இரவு 10 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது.

The post சாரண சாரணியர் வைரவிழாவில் இன்று… appeared first on Dinakaran.

Tags : Scouts Diamond Festival ,Trichy ,Bharata Scouts Diamond Festival ,Muthamizh ,Karunanidhi ,Sipcot Complex ,Manapparai, Trichy ,Dinakaran ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது