×

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது: இலங்கைக்கு செல்ல முயன்றபோது சிக்கினார்

சென்னை: பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் இந்தியத் தலைவர், விமானத்தில் இலங்கை செல்ல முய்ற்சித்த போது சென்னையில் பிடிபட்டார். தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் அனுமகொண்டாவை சேர்ந்தவர் ஜக்ரியா. இவர் தனது சகோதரர்கள் இருவருடன் வசித்து வருகிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு ஜக்ரியா குடும்பத்தினர் வந்துள்ளனர். முதலில் ஆந்திர மாநிலம் குண்டூரில் வசித்து வந்தனர். அனுமகொண்டாவில் வசித்து அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். ஜக்ரியாவிற்கு மனைவிகள் 10 பிள்ளைகள் உள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள கலீபா எனும் தீவிரவாத அமைப்பின் இந்தியாவின் தலைவராக ஜக்ரியா இருக்கிறார். கலீபா அமைப்பின் தலைவர் சமீபத்தில் இறந்து விட்டதாகவும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி இலங்கையில் நடைபெற உள்ள நிலையில் ஜக்ரியா அங்கு செல்ல இருந்தார்.இந்நிலையில் ஜக்ரியா சென்னையில் இருந்து இலங்கை செல்வதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஜக்ரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது: இலங்கைக்கு செல்ல முயன்றபோது சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Chennai ,Zakriya ,Anumakonda ,Warangal district of Telangana ,Pakistan ,
× RELATED ‘நான் இந்தியன்’ என்று கூறியும்...