×

பைக் திருடிய இருவர் கைது

பூந்தமல்லி: சென்னை சூளைமேடு, பத்மநாபன் நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் வளசரவாக்கம், மெஜஸ்டிக் காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக வேலை செய்து வருகிறார். கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற தனது நிறுவனத்தின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர், வேலை முடிந்து வந்து பார்த்தபோது பைக் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், பைக் திருட்டில் ஈடுபட்ட வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), சந்துரு (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும், இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Poonthamalli ,Dinesh ,Chulaimedu, Padmanapan, Chennai ,Enrichment ,Majestic Colony ,
× RELATED பள்ளிபாளையத்தில் கைதியிடம்...