×

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு அழைத்து வர வேண்டும்.. எலான் மாஸ்கிடம் கூறிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்..!!

வாஷிங்டன்: விண்வெளி நிலையத்தில் 7 மாதங்களாக தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோரை பூமிக்கு அழைத்துவர எலான் மஸ்க் உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விண்வெளி வீராங்கனையாக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோரை விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். 10 நாட்களில் பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டியவர்கள் 6 மாத காலமாகியும் இன்று வரை திரும்ப அழைக்கப்படாமல் உள்ளனர். பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக அவர்கள் திரும்ப அழைக்கப்படுவது கால தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோரை பத்திரமாக அழைத்து வரும் பொறுப்பை எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்துள்ளார். இரு விண்வெளி வீரர், வீராங்கனையை விண்வெளியில் முன்னாள் அதிபர் பைடன் தவிக்க விட்டுவிட்டதாக டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மஸ்க் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர டொனால்டு டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ கேட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் இவர்களை நீண்ட காலம் தவிக்க செய்தது கொடூரமானது என்று அவர் கூறினார்.

The post சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு அழைத்து வர வேண்டும்.. எலான் மாஸ்கிடம் கூறிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்..!! appeared first on Dinakaran.

Tags : Sunita Williams ,Earth ,US ,President Trump ,Elon Musk ,Washington ,President Donald Trump ,Butch ,Wilmore ,NASA… ,US President Trump ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...