இலுப்பூர்,ஜன.29: அன்னவாசல் அருகே உள்ள குடுமியாண்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உணவு பாதுகாப்பிற்காக வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியலில் புதிய உயிரியல் மற்றும் உயிர் தொழில் நுட்பத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரியான குடுமியாண்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் சென்னை தேசிய உயிரியல் அறிவியல் அக்கடெமியால் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் நக்கீரன் தலைமை வகித்தார்.
சென்னை தேசிய உயிரியல் அறிவியல் அக்கடெமி தலைவர் பாக்கியராஜ் இந்த மாநாட்டை துவக்கி வைத்தார். இதில் இந்நியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உயிரியல் மற்றும் உயிர் தொழில் நுட்ப துறையில் முதுகலை பயிலும் மாணவர்கள். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசியர்கள் தங்களிவ் ஆய்வறிக்கைகளள் மற்றும் ஆராய்ச்சி கடிதங்களை முன்வைத்தனர். மேலும் இந்த மாநாட்டில் உயிரியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணையன் வாழ்நாள் சாதனையாளர் விருது வடக்கு வங்காள பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் பிஸ்வந்த் சக்கரவர்த்தி மற்றும் நாக்பூர் பல்கலைகழக பிரமோத் ராம தேகீ ஆகியோருக்கும், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது தழிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் முனைவர் பரோடா மற்றும் துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நாட்டின் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ச்சியை மையமாக வைத்து நடைபெற்ற இந்த கருத்தரங்கு மாநாட்டில் உயிரியல் மற்றும் உயிர் தொழில் நுட்பதத்தால் நாட்டின் வேளாண்மைக்கு ஏற்படும் வளர்ச்சி. ஆதன் முக்கியதுவம் மற்றும் சமீபத்திய முன்நேற்றங்கல் பற்றியும் இதனால் நாட்டின் உணவு பாதுகாப்பில் ஏற்படும் நன்மைகள் பருவகாலமாற்ற்தை உயிர் தொழில் நுட்பத்தின் மூலம் தவிர்க்கும் முறைகள் குறித்த ஆராய்ச்சிகள் விவாதிக்கப்பட்டது.
The post அன்னவாசல் அருகே அரசு வேளாண்மை கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கு மாநாடு appeared first on Dinakaran.
