×

அமெரிக்க பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன்

திருவலம், ஜன.29: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் அமெரிக்க சான் டயாகோ பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அனைத்து துறை இளங்கலை முதுகலை ஆராய்ச்சி படிப்புகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் அமெரிக்க சான் டயாகோ பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று செய்யப்பட்டது. அப்போது வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல்முருகன், பேராசிரியர்கள் மாதவன், கதிரேசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 2 பல்கலைக்கழகத்திலிருந்து ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளனர்.

The post அமெரிக்க பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் appeared first on Dinakaran.

Tags : American University ,Vellore Thiruvalluvar University ,Thiruvalam ,American University of San Diego ,Kathpadi taluka, ,Thiruvalam, Vellore district ,
× RELATED சென்னை, ஆந்திராவில் கைவரிசை காட்டிய...