×

கோவை குடியரசு தின கோப்பை காரத்தே போட்டி

 

கோவை: கோவை பட்டணத்தில் சென் சாய்.சிரில் செல்வம் நினைவு கோப்பை சார்பில் குடியரசு தின கோப்பை, மாநில அளவிளான கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் நடந்தது. ஜீடி மேரி தலைமை வகித்தார். இப்போட்டிகளில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆசிய கராத்தே நடுவர் ரென்சி. சிரில் வினோத் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

போட்டியை, திமுக கோவை தெற்கு மாவட்ட இலக்கிய அணித்தலைவர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரகு (எ) துரைராஜ், ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், ஜேகேடிசி அமைப்பு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

The post கோவை குடியரசு தின கோப்பை காரத்தே போட்டி appeared first on Dinakaran.

Tags : Coimbatore Republic Day Cup Karate Competition ,Coimbatore ,Republic Day Cup ,Sen. Sai. Cyril Selvam Memorial Cup ,JD Mary ,Tamil Nadu… ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது