×

காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை வேலூர் எஸ்பி அலுவலகத்தில் கணவன் மீது புகார்

வேலூர், ஜன.28: காதல் திருமணம் செய்த மனைவிய வரதட்சணை கேட்டு கணவர் தன்னை அடித்து கொடுமை செய்வதாக நர்ஸ் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா கொண்டமல்லி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது நர்ஸ். இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அதில், நான் பிஎஸ்சி நர்சிங் முடித்து தற்போது துபாய் அபுதாபியில் நர்சாக வேலை செய்து வருகிறேன். நான் பெங்களூரில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த போது வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பெரியபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்தேன். 2023ம் ஆண்டு நாங்கள் இரு வீட்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்தின்போது எனக்கு 11 பவுன் தங்க நகைகள், ₹5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள், திருமணத்திற்கு ₹5 லட்சம் என எனது பெற்றோர் வழங்கினர். நான் வேலை நிமித்தமாக துபாய் அபுதாபிக்கு சென்று விட்டேன். எனது கணவர் 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நான் பணிசெய்யும் இடத்திற்கு வந்து செல்வார். திருமணமான சில காலங்களிலேயே எனது கணவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். மேலும் வரதட்சணையாக எனது பெற்றோரிடம் கூடுதலாக 4 சவரன் நகை கேட்டு அவர்களை வற்புறுத்தி வருகிறார். மேலும், ஊருக்கு வரும்போது வரதட்சணை கேட்டு என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தார். 3 மாத குழந்தையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். எனவே எனது கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை வேலூர் எஸ்பி அலுவலகத்தில் கணவன் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Vellore ,SP ,Vellore SP ,Kondamalli ,Peranampattu taluka ,Vellore district ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு...