×

உத்தரகாண்ட் மாநிலத்தை அடுத்து பொதுசிவில் சட்டம் மற்ற மாநிலங்களிலும் அமல்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

தஞ்சாவூர்: உத்தரகாண்ட் மாநிலத்தை அடுத்து பொதுசிவில் சட்டம் படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் அமல் படுத்தப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டை பிரதமர் மோடி மிகவேமாக வளர்ச்சி பாதையில் எடுத்துச்சென்றுள்ளார். நாடு முழுவதும் சாலை விரிவாக்கம், விமானநிலைய விரிவாக்கம், கிராம சாலைகள் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் பாஜ ஆட்சி சிறப்பாக நடக்கிறது. வரும் 2026 சட்டசபை தேர்தல் நமக்கு மிகப்பெரிய இலக்கு. வக்பு வாரிய சட்ட திருத்தம் வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இதற்காக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுசிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களிலும் படிப்படியாக கொண்டுவரப்படும். வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post உத்தரகாண்ட் மாநிலத்தை அடுத்து பொதுசிவில் சட்டம் மற்ற மாநிலங்களிலும் அமல்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Union Minister of State L. Murugan ,Thanjavur ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...