×

குளிப்பதற்கு ஹீட்டர் போட்ட போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு


போரூர்: வடபழனி தாரா சிங் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் அம்மாஸ் (27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அம்மாஸ், குளிக்க வெந்நீர் போடுவதற்கு, வாளியில் தண்ணீரை ஊற்றி ஹீட்டர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அம்மாஸ் வாளியில் கை வைத்தாக கூறப்படுகிறது.

அப்போது மின்சாரம் பாய்ந்து, அம்மாஸ் கீழே விழுந்தார். அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். வடபழனி போலீசார் அம்மாஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குளிப்பதற்கு ஹீட்டர் போட்ட போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ammas ,Vadapalani Tara Singh Colony 3rd Street ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்