×

நீதி, சமத்துவம், மாண்பை உறுதி செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு நாள் வாழ்த்து

சென்னை: அனைவருக்கும் நீதி, சமத்துவம், மாண்பு ஆகியவற்றை உறுதி செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை போற்றுவோம் என குடியரசு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

இந்தியாவின் 76வது குடியரசு நாளில், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மாண்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை போற்றுவோம். முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும். அனைவருக்கும் நம்பிக்கையும் நல்நோக்கமும் நிறைந்த குடியரசு நாள் வாழ்த்துகள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நீதி, சமத்துவம், மாண்பை உறுதி செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு நாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Republic Day ,Chennai ,India ,76th Republic Day ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்