×

சென்னை-திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் முதலாவது நடைமேடையில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு: துரை வைகோ எம்.பி நன்றி

சென்னை: மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: சென்னை-திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் திருச்சியில் முதலாவது நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. அதே போன்று சென்னையிலிருந்து திருச்சி வந்து சேரும் ரயில் 4 வது மற்றும் 8வது நடைமேடைகளில் தற்போது வந்து சேர்கின்றது. இதனால், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள், ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்படுவதாக புகார்கள் வந்தன.

இந்தநிலையில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனை சந்தித்த போது சென்னையிலிருந்து திருச்சி வந்து சேரும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்தி, பயணிகளின் சிரமங்களை தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு கோட்ட மேலாளர் அன்பழகன் நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். நமது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட டிஆர்எம்-க்கு எனது நன்றியினை தெரிவித்து கொண்டேன்.

The post சென்னை-திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் முதலாவது நடைமேடையில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு: துரை வைகோ எம்.பி நன்றி appeared first on Dinakaran.

Tags : Chennai-Trichy ,platform 1 ,Durai Vaiko ,Chennai ,MDMK ,Principal Secretary ,Twitter ,Trichy ,platform ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...