- தேசிய வாக்காளர் தினம் விழிப்புண
- அன்னூர்
- தேசிய வாக்காளர் தினம்
- எஸ்.எஸ்.குளம்
- கொந்தம்பாளையம்
- அன்னூர் தாலுகா, கோவை மாவட்டம்
- அன்னூர் தாசில்தார் குமரி ஆனந்தன்
- கோவில்பாளையம்
- தின மலர்
அன்னூர்,ஜன.26: கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ். குளத்தில் நேற்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவில்பாளையம் பேருந்து நிலையத்தில் அன்னூர் தாசில்தார் குமரி ஆனந்தன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் துணை தாசில்தார் ரேவதி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
The post தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.
