- திமுக
- வி. சி. சந்திரகுமார்
- பெரியாரியமும் அம்பேத்கரியனும்
- ஈரோடு
- ஈரோட் கிழக்கு
- காங்கிரஸ்
- வெ.
- தவகா
- கம்யூனிஸ்டுகள்
- தின மலர்
ஈரோடு, ஜன.26: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு, பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிட உள்ளார். இவருக்கு, காங்கிரஸ், விசிக, தவாக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான முத்துசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், பெரியாரிய அமைப்புகள், அம்பேத்கரிய அமைப்புகள் பங்கேற்று, வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கின்றனர். இக்கூட்டத்தில், திமுக மாநில துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் ஆதரவு appeared first on Dinakaran.
