×

டவுன் சந்திபிள்ளையார் கோயில் மின்மாற்றி தூண்களை சரிசெய்ய கோரிக்கை

நெல்லை : நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோயில் அருகே காணப்படும் மின்மாற்றி தூண்களை மாற்றிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத் தலைவர் முகம்மது அயூப் சார்பில் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோயிலின் இடது பக்கம் சுவரையொட்டி மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியின் மொத்த பாகங்களையும் தாங்கி நிற்கும் தூண்கள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது.

மேலும் இதன் அருகேயுள்ள மின் கம்பம் ஒன்றின் அடிப்பாகமும் பெயர்ந்து பழுதாகி காணப்படுகிறது. கோயிலுக்கு முக்கிய வழி போக, இந்த மின் மாற்றியின் அருகே மற்றொரு வழியும் உள்ளது. அதிகளவில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகவுள்ள இந்த இடத்திலுள்ள மின்மாற்றியினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மின்மாற்றியை தாங்கி நிற்கும் தூண்களை விரைவாக சீர்செய்வதோடு, அதன் அருகில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியை சீரமைத்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post டவுன் சந்திபிள்ளையார் கோயில் மின்மாற்றி தூண்களை சரிசெய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Town Chandipillaiar Temple ,Nellai ,Nellai Town Chandipillaiar Temple ,Nellai District Public Welfare Association ,President ,Muhammad Ayub ,Nellai Town Chandipillaiar Temple… ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி