×

திருத்துறைப்பூண்டியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பேரணி

திருத்துறைப்பூண்டி, ஜன.24: திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 ஆவது புத்தக திருவிழா நடைபெறுவதையொட்டி திருத்துறைப்பூண்டியில் மாடர்ன் நர்சரி பிரைமரி பள்ளி மற்றும் விட்டுக்கட்டி வள்ளுவர் உதவி பெறும் தொடக்கப்பள்ளி இணைந்து புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது. மாடர்ன் பிரைமரி நர்சரி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி அண்ணாசிலை, காமராஜர் சிலை வழியாக மன்னை சாலை, ரயில்வே நிலையம் வழியாக நகராட்சி அலுவலகம் வந்தது. முன்னதாக நகராட்சி நிர்வாகத்தினர் வரவேற்றனர். திருத்துறைப்பூண்டி நகர் மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் பேரணியை தொடங்கி வைத்த்தார்.

இப்பேரணியை நகராட்சி ஆணையர் துர்கா முடித்து வைத்தார். விழிப்புணர்வு பிரச்சாரத்தில் புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், வாசிப்பு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டும் நகரின் முக்கிய பகுதியில் வலம் வந்தனர்.திருவாரூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஒவ்வொருவரும் தனது வீட்டில் ஒரு பகுதியில் நூலகமாக செயல்படவேண்டும். ஒவ்வொரு மாணவரும் புத்தகம் வாசிப்பதன் மூலம் போட்டி தேர்வுகள் எழுதி உயர் பதவி அடையலாம் என்கிற கருத்து வலியுறுத்த ப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு தேவையான புத்தகங்களை நாங்களே வாங்கித்தர தயாராக உள்ளோம். நீங்கள் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள் என்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நூலகர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன், துணைத்தலைவர் விஜயராஜ் பொருளாளர் மேஜிக் அகிலன், மாடர்ன் பிரைமரி நர்சரி பள்ளியின் முதல்வர் தீபா ராணி, விட்டுக்கட்டி பள்ளி ஆசிரியை மணிமலர், லயன்ஸ் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் லயன்ஸ் தலைவர் வேதமணி, பொருளாளர் ரகுராமன், நகர் மன்ற உறுப்பினர் மாயா சமூக ஆர்வலர் கமல், கவிஞர் இளைய குமார்,ஆசிரியர்கள் வீரகுமாரி, அபிராமி, திவ்யா, ராமஜெயந்தி, ஆர்த்தி, சரண்யா, விஜயரேகா, சுபா, விஜயலட்சுமி உள்ளிட்ட மாணவ மாணவியர் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். லயன்ஸ் சங்கத் தலைவரும், பள்ளியின் தாளாளர் முருகானந்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார்.

The post திருத்துறைப்பூண்டியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : EDITARAPUNDI ,Thiruthuraipundi ,Thiruvarur District Administration ,3rd Book Festival ,Book Festival ,Thiruvarapoundi ,Modern Nursery Primary School ,Vidukati Valluvar Primary School ,Book Reading Awareness Rally ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...