×

முதியவர் வீட்டு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் மாயம்

களக்காடு,ஜன.24: களக்காடு-சேரன்மகாதேவி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (60). இவரது மனைவி முத்தமிழ்ச்செல்வி (55). கடந்த டிசம்பர் 15ம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக முத்தமிழ் செல்வி சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்ததும், 5 பவுன் எடையுள்ள தங்க டாலர் செயின், 2 பவுன் எடையுள்ள அட்டிகை, 6 கிராம் எடையுள்ள கம்மல் ஆகியவற்றை ஒரு பர்சில் வைத்து, அவைகளை வீட்டு படுக்கையறையில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று தற்செயலாக பீரோவை திறந்து பார்த்த போது தங்கநகைகள் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது எப்படி? மர்ம நபர்களால் திருடப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவர் வீட்டு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,Sampath ,Kalakkadu-Cheranmahadevi Road ,Muthamiz Selvi ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்