×

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில்நுட்ப, பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சி


செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில்நுட்ப, பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சேர்ந்து பயில 12ம் வகுப்பு தேர்ச்சி, தொழிற்பயிற்சி, பட்டயம் படிப்பு மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில்நுட்ப, பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Adi Dravidars ,Chengalpattu ,Collector ,Arunraj ,Tamil Nadu ,Adi Dravidar Housing and Development Corporation ,TADCO ,Chengalpattu District ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான...